Posts

மலையே கரைந்தது

இலங்கை வேந்தன் ராவணனுக்கு ஓர் ஆசை . தேவர்கள் எனக்கு அடங்கி பயந்து நடக்கிறார்கள் . பல அரக்கர்களை நான் வென்றிருக்கிறேன் . என்றாலும் அருகில் உள்ள தமிழகம் மட்டும் என் ஆளுகைக்குள் வராமல் உள்ளது . எனவே தமிழகத்தை வென்று அதை நம் ஆளுகைக்கு உட்படுத்த வேண்டும் என்பதே அந்த ஆசை . உடனே அவன் தன் புஷ்பக விமானத்தில் தன்னுடைய சகாக்களுடன் பொதிகை மலைக்கு வந்தான் . அங்கே அகத்திய முனிவரைச் சந்தித்தான் . ராவணனின் நோக்கம் அகத்தியருக்குப் புரிந்துவிட்டது . தவவலிமையால் ஒப்புயர்வற்ற சிவபெருமானிடமிருந்து ஒப்பற்ற தமிழ்மொழியைப் பெற்ற அகத்திய முனிவருக்கு வணக்கம் , என்றான் பணிவுடன் . சிவனைக்குறித்து பலவகையான தவங்கள் இயற்றி , அதன் பயனாய் மூன்று கோடி வருடம் ஆயுளைப்பெற்ற ராவணன் என் இருப்பிடத்திற்கு வந்திருப்பது கண்டு மகிழ்ச்சியடைகிறேன் . வா ! வா ! என்று வரவேற்றார் அகத்தியர் . ராவணன் தன் வருகையின் உள்நோக்கத்தை தானே வெளிப்படையாகச் சொல்லும்படி செய்தார் அகத்தியர் . ராவணா ! இலங்கையில் இருக்க வேண்டிய நீ தமிழ்நாட்டிற்கு வந்திருப்பதன் நோக்...

கேலிக்கு அஞ்சாதீர்

கண்ணன் கவலையுடன் இருந்தான். கோயிலுக்கு சென்ற அவன் சரஸ்வதி சன்னதிதானத்தில் நின்று கொண்டு, அம்மா, தாயே! என் வகுப்பில் படிக்கும் பல மாணவர்கள் என்னை விட நன்றாகப் படிக்கிறார்கள். நேற்று குருநாதர் ராமாயணம் கற்றுத் தந்தார். நான் ஏதோ ஒரு மனநிலையில் இருந்தேன். ஆசாரியர் சொல்லித் தந்ததை கவனிக்கவில்லை. கடைசியில் ராவணனின் தம்பி யார் என்று கேட்டார். நான் என் காதில் விழுந்த ஏதாவது ஒரு பெயரைச் சொல்லி வைப்போமே என்று லட்சுமணன் என சொல்லி விட்டேன். மாணவர்கள் விழுந்து விழுந்து சிரித்தார்கள். குருநாதர் என்னை போடா ஞானசூன்யமே என விரட்டி விட்டார். நான் வருத்தப்பட்டேன். அதே நேரம் அந்த கேலி சிரிப்பு என் காதுகளில் ஒலித்துக் கொண்டே இருக்கிறது. தாயே! தயவு செய்து என்னையும் ஒரு கலாவல்லவன் ஆக்கி அருள் புரிவாய், என்றான்.சரஸ்வதி சிலையைக் கட்டிக் கொண்டு அழுதான். கருணைக்கடலான அந்த கல்வி தெய்வம் கண் விழித்தாள். மகனே! கவலைப்படாதே, யாரையும் நான் அறிவின்றி படைப்பதில்லை. ஆனால், குரு சொல்லிக் கொடுக்கும் போது, நீ அதைக் கவனியாமல், விளையாடிக் கொண்டிருந்தது உன் தவறுதானே! இனியேனும் இத்தவறைச் செய்யாதே. மேலும், பிறர் கேலி செய...

பாவம் ஓரிடம் பழி ஓரிடம்

ஒரு அந்தணரும் அவரது மனைவியும் தங்கள் இரண்டு வயது குழந்தையுடன் காட்டுப்பாதையில் மதுரை நோக்கி வந்து கொண்டிருந்தனர் . வழியில் ஓரிடத்தில் களைப்பாய் இருக்கவே , தாகசாந்தி செய்ய எண்ணினர் . அந்தணர் , மனைவியை குழந்தையுடன் ஒரு மரத்தடியில் அமர வைத்தார் . அவள் களைப்பில் மரத்தடியில் படுத்தாள் . கூஜாவுடன் அருகில் தெரிந்த நீரோடையை நோக்கிச் சென்றார் . அந்த மரத்தின் மீது யாரோ ஒரு வேடன் விட்ட அம்பு கிளைகளிடையே தங்கி நின்றது . சற்றுநேரத்தில் காற்றடிக்கவே , கிளையில் தொக்கி நின்ற அம்பு படுத்திருந்த அந்தப் பெண்ணின் வயிற்றில் தைத்தது . அது விஷம் தோய்ந்த அம்பு . விஷம் உடலில் பரவி அவள் இறந்தாள் . அப்போது அங்கே ஒரு வேடன் வந்தான் . ஒரு பெண் இறந்து கிடப்பதையும் , அருகில் அவளது குழந்தை அழுது கொண்டிருப்பதையும் பார்த்தான் . இதற்குள் அந்தணரும் வந்து விடவே , வயிற்றில் அம்பு தைத்து இறந்து கிடக்கும் மனைவியைப் பார்த்தார் . அருகில் நின்ற வேடன் மீது சந்தேகம் கொண்டு , என்ன நோக்கிலடா என் மனைவியைக் கொன்றாய் ? நீ வேட்டைக்காரனா ? அல்லது க...

பாணர்

ஸ்ரீரங்கம் அருகில் ஒரு அழகான சிற்றூர் . இவ்வூரில் பாணர் இனத்தைச் சேர்ந்த ஒரு பக்தர் இருந்தார் . இப்பக்தர் ஸ்ரீரங்கநாதர் மீது மிகுந்த பக்தியும் , நன்றாகப் பாடும் திறமையும் கொண்டவர் . ஆலயம் சென்று ரங்கநாதரை தரிசனம் செய்ய அவர் பிறந்த குலம் தடையாக இருந்தது . அதனால் , அவர் தினமும் காவிரியின் கரையில் நின்றபடி ரங்கநாதர் கோயிலைப் பார்த்து இரு கரம் கூப்பித் தொழுது பாடிச் செல்வார் . ரங்கநாதர் கோயில் அர்ச்சகர் லோக சாரங்கி . ஒருநாள் இவர் கோயில் கைங்கர்யம் செய்வதற்காக காவிரியில் நீராடிவிட்டு வந்தார் . பாணர் அர்ச்சகர் வரும் பாதையில் நின்று கண்களை மூடி ரங்கநாதரை நினைத்து மிக உருக்கமாக பாடிக்கொண்டிருந்தார் . அர்ச்சகர் வருவதை இவர் அறியவில்லை . உடனே அர்ச்சகர் , ஏய் ... பாணா ? ஒதுங்கி நில் . நான் கோயிலுக்கு அவசரமாக செல்ல வேண்டும் , என்றார் . இறைவனிடம் மனம் லயித்திருந்த பாணனுக்கு அர்ச்சகர் கூறிய வார்த்தைகள் கேட்கவில்லை . அதனால் , அர்ச்சகர் ஒரு கல்லை எடுத்து பாணர் மீது வீசினார் . கல் பாணர் நெற்றியில் பட்டு ரத்தம் ...

ஏழு கடல் வந்தது

ஒருமுறை கவுதம மாமுனிவர் மதுரை மாநகரம் வந்து சோமசுந்தர பாண்டியன் என்ற பெயரில் இவ்வூரை ஆண்ட , பரமேஸ்வரனை சந்தித்து உரையாடினார் . பரமனாரிடம் விடைபெற்று திரும்பும்போது , மரியாதை நிமித்தம் மீனாட்சியின் தாயார் காஞ்சனையைச் சந்தித்து சற்றுநேரம் பேசிக் கொண்டிருந்தார் . காஞ்சனை முனிவரிடம் , பெருமானே ! என்ன நடைமுறையைக் கையாண்டால் நீங்காத பிறவிநோய் அகலும் ? என்று கேட்டாள் . கவுதமர் , பிறந்து , பிறந்து அலுக்கும் பிறவிநோயை அகற்றிக்கொள்ள எத்தனையோ வழிகள் உள்ளன . அவற்றில் சிறப்பாகக் குறிப்பிடக்கூடியது தூய நீராடல் ஆகும் . புனிதமான நதிநீரில் நீராடும் வாய்ப்பு கிடைக்குமாயின் அது மிகவும் சிறப்பாகும் . இதைவிடச் சிறப்பு ஆறுகள் சென்று கலக்கும் கடலில் நீராடுவது ஆகும் என்று கூறினார் . காஞ்சனைக்கு உடனே கடலில் நீராட வேண்டுமென்ற எண்ணம் வந்துவிட்டது . கடல் உள்ள ஊர் நோக்கி புறப்பட ஆயத்தமானாள் . விஷயமறிந்த பரமேஸ்வரன் மீனாட்சியை அழைத்து , உன்னுடைய அன்னையார் கடலாட விருப்பம் கொண்டு கடல் இருக்குமிடம் தேடிப் புறப்பட்டதாக அறிந்தேன் . அவர...