Posts

Showing posts from May, 2019

கந்தன் கருணை

சத்தியவதிக்கு குழந்தை இல்லாத பெருங்குறை மனதை வாட்டியது . அந்த முருகபக்தை கந்தனிடம் எவ்வளவோ கெஞ்சிப்பார்த்தாள் . கந்தன் என்னவோ இவள் முகத்திலேயே விழிக்க விரும்பாதவன் போல அமைதியாக இருந்தான் . ஒருநாள் சஷ்டி விரதம் . காலையிலேயே நீராடி , சஷ்டி கவசம் பாடிக் கொண்டிருந்தாள் சத்தியவதி . அவளது மாமியார் காமாட்சி பூஜையறைக்குள் வந்தாள் . மலட்டு நாயே ! நேற்றே உன்னிடம் என்ன சொன்னேன் ! குழந்தை இல்லா குறை போக்கும் வைத்தியர் ஒருவர் நம் ஊருக்கு வருகிறார் . அவரிடம் போய் வைத்தியம் பார் என்று சொன்னேன் . நீ இங்கே உட்கார்ந்து முருகா ... முருகா என அழுது கொண்டிருக்கிறாய் . பன்றியே ! அந்த முருகன் என்ன மயில் மீது பிள்ளையை தூக்கி வைத்துக் கொண்டா வரப்போகிறான் . உடனே கிளம்புடி , என்றாள் மனம் புண்படும் வகையில் . இந்த வசைமாரியைக் கண்டு அனலில் விழுந்த புழுவாய் துடித்தாள் சத்தியவதி . அவள் கணவன் வெளியூர் சென்றிருந்தான் . யாரிடம் சொல்லி அழ ! அத்தை , ஏன் இப்படி பேசுகிறீர்கள் ? நான் தினமும் அந்த முருகனை வணங்குகிறேன் . அவன் ஏனோ கண்ணை மூடிக...

காமோதர மலர்

குஷன் என்ற தேவனுக்கும் , ஹூண்டன் என்ற அசுரனுக்கும் கடும் பகை ஏற்பட்டது . இருவருக்கும் இடையே ஒருமுறை கடும் கைகலப்பு ஏற்பட்டது . இதில் ஹூண்டனை நகுஷன் கொன்றுவிட்டான் . தன் தந்தையைக் கொன்ற நகுஷனையும் , அவனது தேவகுலத்தையும் அழிக்க ஹூண்டனின் மகன் விஹூண்டன் சபதம் செய்தான் . விஹூண்டன் கொடூரமானவன் . அவனைக் கண்டு தேவகுலமே நடுங்கியது . தேவர்கள் திருமாலை அணுகி தங்களைப் பாதுகாக்க வேண்டினர் . திருமால் நினைத்தால் மறையும் தன்மையுடைய ஒரு அழகியை , விஹூண்டனை அழிப்பதற்காக அனுப்பி வைத்தார் . அவளைப் பார்த்ததும் விஹூண்டன் காதல் கொண்டான் . அவளைத் திருமணம் செய்ய விரும்புவதாகக் கூறினான் . அவள் ஒரு நிபந்தனை விதித்தாள் . காமோதரம் என்ற மலரைப் பறித்து வந்து யார் என் தலையில் சூடுகிறார்களோ , அவரே என்னைத் திருமணம் செய்ய முடியும் என சொல்லி விட்டாள் . அந்த அசுரனும் அம்மலர் பற்றி விசாரித்தான் . தங்களுக்கு பிச்சி , முல்லை , கனகாம்பரம் , ரோஜா போன்ற மலர்கள் தான் தெரியுமென்றும் . காமோதரம் என்றால் என்னவென்றே தெரியாது என்று பலரும் சொல்லி ...

இறைவன் எதுவும் செய்வான்

நடக்குமோ நடக்காதோ என்ற அரைகுறை நம்பிக்கையுடன் கோயிலுக்குப் போனால் நாம் வேண்டுவது நடக்கவே நடக்காது . பக்தியின் அடிப்படையே அதீத நம்பிக்கை தான் . ஒரு சிவபக்தனுக்கு மகன் ஒருவன் இருந்தான் . அவன் தீராத நோயால் கஷ்டப்பட்டான் . எவ்வளவோ வைத்தியம் செய்தாயிற்று . பணமும் கரைந்துவிட்டது . இனி வைத்தியம் செய்ய வழியும் இல்லை . தன் மகன் பிழைக்க வேண்டுமென சிவனிடம் தினமும் பிரார்த்தனை செய்வான் பக்தன் . சிவனே ! உன்னை நினைக்காத நாளில்லை . பாடாத நாளில்லை , என் மகனுக்கு ஏதாவது ஒன்று என்றால் , அதனால் எனக்கு அவமானமல்ல . இவ்வளவு காலமும் சிவனிடம் பக்தி செலுத்தினாயே . அந்த பக்தி என்னாயிற்று என யாராவது என்னைக் கேலி செய்தால் , அந்தக் கேலி என்னைப் பாதிக்காது . அவர்கள் உன்னைத்தான் கேலி செய்கிறார்கள் என அர்த்தம் , என கண்ணீர் வடித்தான் . ஒருநாள் ஒரு துறவி வந்தார் . அவரிடம் , சாமி ! என் மகன் பிழைக்க வழி சொல்லுங்கள் . கடவுள் கண் திறப்பாரா ? என்றான் . துறவி அமைதியாக , மகனே ! திக்கற்றவர்க்கு தெய்வமே துணை . உன் பக்தி உன் மகனை நிச்சயம் க...

எல்லாரும் எல்லாமும் பெற வேண்டும்

ஒரு முனிவரிடம் இரண்டு சீடர்கள் இருந்தனர் . இருவரும் பலசாலிகள் , புத்திசாலிகள் . ஒருமுறை தங்களில் யார் புத்திசாலி என்பதில் இவர்களுக்குள் சண்டை ஏற்பட்டது . விஷயம் முனிவரிடம் வந்தது . அவர் சீடர்களிடம் , சீடர்களே ! இன்று ஏனோ எனக்கு அதிகமாகப் பசிக்கிறது . சமையல் முடிய தாமதாமாகும் . அதோ ! இரண்டு பேரும் அதோ அந்த மரத்தில் இருக்கும் பழங்களைப் பறித்து வாருங்கள் , என்றார் . குருவிடம் மிகவும் பணிவாக நடந்து கொள்ளும் அந்த சீடர்கள் மரத்தை நோக்கி ஓடினர் . மரத்தை நெருங்க முடியாமல் , முள்செடிகள் சுற்றி நின்றன . முதல் சீடன் சற்று பின்னோக்கி வந்தான் . பின்னர் முன்னோக்கி வேகமாக ஓடினான் . ஒரே தாண்டில் மரத்தை தொட்டான் . பழங்களை முடிந்தளவுக்கு பறித்தான் . மீண்டும் ஒரே தாவில் குருவின் முன்னால் வந்து நின்று , பார்த்தீர்களா ! கணநேரத்தில் கொண்டு வந்து விட்டேன் , என்றான் பெருமையோடு . இரண்டாமவன் ஒரு அரிவாளை எடுத்து வந்தான் . முள்செடிகளை வெட்டி ஒரு பாதை அமைத்தான் . அப்போது சில வழிப்போக்கர்கள் அலுப்போடு வந்தனர் . அவர்கள் வெட்டப்பட்ட ...